/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வியாசர்பாடி அரசு பள்ளிகள் சென்னை கால்பந்தில் அசத்தல்..
/
வியாசர்பாடி அரசு பள்ளிகள் சென்னை கால்பந்தில் அசத்தல்..
வியாசர்பாடி அரசு பள்ளிகள் சென்னை கால்பந்தில் அசத்தல்..
வியாசர்பாடி அரசு பள்ளிகள் சென்னை கால்பந்தில் அசத்தல்..
ADDED : செப் 10, 2024 06:15 AM

சென்னை: 'லேட்டெண்ட்வியு அனலைடிக்ஸ்' எனும் தனியார் நிறுவனர் சார்பில், சி.கே.எல்., எனும் சென்னை கால்பந்து லீக் சீசன் - 4, கீழ்ப்பாக்கம் எஸ்.டி.ஏ.டி.,யின் நேரு பூங்கா மைதானத்தில் நேற்று துவங்கியது.
இத்தொடரில், 14 வயதிற்குட்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலிருந்து சிறுவர், சிறுமியரில் தலா 18 அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டியை, இந்தியன் சூப்பர் லீக்கில் சென்னையின் எப்.சி., அணிக்காக விளையாடிய இந்திய தொழில்முறை கால்பந்தாட்ட வீரரான தனபால் கணேஷ் துவங்கி வைத்தார்.
மாணவர்களுக்கான முதல் போட்டியில், வியாசர்பாடி சர்மா நகர், சென்னை அரசு பள்ளி அணி, 2 - 0 என்ற கணக்கில், பெரம்பூர் சென்னை அரசு பள்ளியை தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில், கோட்டூர் ரைசிங் ஸ்டார்ஸ் அணி, 2 - 1 என்ற கணக்கில் அரும்பாக்கம் அரசு பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மாணவியருக்கான போட்டியில், வியாசர்பாடி, சர்மா நகர் சென்னை அரசு பள்ளி, 6 - 0 என்ற கோல் கணக்கில் பெரம்பூர் அரசு பள்ளியை வீழத்தியது. 14ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.