/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டி கொலை முன்விரோதத்தில் பழித்தீர்க்கப்பட்டாரா?
/
வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டி கொலை முன்விரோதத்தில் பழித்தீர்க்கப்பட்டாரா?
வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டி கொலை முன்விரோதத்தில் பழித்தீர்க்கப்பட்டாரா?
வில்லிவாக்கத்தில் ரவுடி வெட்டி கொலை முன்விரோதத்தில் பழித்தீர்க்கப்பட்டாரா?
ADDED : மே 28, 2024 05:41 AM

வில்லிவாக்கம்: கொலை வழக்கில் ஜாமினில் வெளி வந்த ரவுடி வில்லிவாக்கத்தில் வெட்டி கொல்லப்பட்டார்.
ஐ.சி.எப்., - டாக்டர் அம்பேத்கர் பகுதியை சேர்ந்த ரவுடி உதயகுமார், 30. சிறை சென்று ஜாமினில் வெளிவந்த இவர், நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் எம்பார் நாயுடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சாலையோரத்தில் நண்பர்களுடன் மது அருந்தினார்.
அப்போது, அங்கு பைக்கில் மூன்று பேர் கும்பலாக வந்தனர். உதயகுமாரை, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயகுமாரை வில்லிவாக்கம் போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு, 12:30 மணிக்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த வில்லிவாக்கம் போலீசார், மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், அதே பகுதியில், 2022ல் கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில், ரவுடி டபுள் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், உதயகுமார் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக உதயகுமார் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த உதயகுமார், நீதிமன்ற நிபந்தனைப்படி செங்குன்றம் அடுத்த அலமாதியில் தங்கியிருந்தார்.
ரஞ்சித் கொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக, உதயகுமார் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல், பல கொலை வழக்குகளில் உதயகுமாருக்கு தொடர்பு இருப்பதால், முன்விரோதத்தில் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.