நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சி மேட்டுமாநகர் பகுதியில் புதியதாக விநாயகர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.
இங்கு காவலாளியாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 69 என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை செல்வம் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்கு பதிந்த போலீசார், காவலாளி கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

