sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிலத்தடி சுரங்கத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை வெள்ள தடுப்பு, நீர் மேலாண்மையில் புது முயற்சி

/

நிலத்தடி சுரங்கத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை வெள்ள தடுப்பு, நீர் மேலாண்மையில் புது முயற்சி

நிலத்தடி சுரங்கத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை வெள்ள தடுப்பு, நீர் மேலாண்மையில் புது முயற்சி

நிலத்தடி சுரங்கத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை வெள்ள தடுப்பு, நீர் மேலாண்மையில் புது முயற்சி


ADDED : மே 29, 2024 06:33 AM

Google News

ADDED : மே 29, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலையாறு நீர்நிலைகளை இணைத்து, குடிநீர் ஆதார ஏரிகளின் அருகில் நிலத்தடி சுரங்கங்கள் அமைத்து, நீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், இதற்கான சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருகிறது.

சென்னை மற்ற பெருநகரங்களை போல் அல்லாமல், சமமான நிலப்பரப்பை கொண்டுள்ளது.

நகரமயமாக்கலுக்கு முன், ஏராளமான ஏரிகள் சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்தன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஏரிகள், கால்வாய்கள் போன்றவை காணாமல் போய் விட்டன.

இதன் காரணமாக, பிரதான சாலை முதல் உட்புற சாலைகள் வரை, மழைநீர் வடிகாலை மாநகராட்சி அமைத்து வருகிறது.

குறிப்பாக கூவம், அடையாறு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம், கோவளம் மழைநீர் வடிகால் திட்டம், கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த மழைநீர் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள பாதிப்பை தடுக்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.

அதேபோல், கோடை காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, தட்ப வெப்ப நிலை மாற்றத்தால், அதிக அளவு மழை மற்றும் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையான, 'ஜைகா'வின் நிதி உதவியுடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், நீர் மேலாண்மை குறித்து நீர்வளத்துறை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சமீபத்தில் அந்நாட்டிற்குச் சென்று, நேரில் ஆய்வு செய்தனர்.

அங்கு, நிலத்தடி சுரங்கங்கள், 'சைபோன்' குழாய்கள், நீர் படுகைகளை விரிவுபடுத்துதல், ஒரு நீர்நிலையில் இருந்து மற்றொரு நீர்நிலைக்கு நீரை அனுப்புதல் போன்றவற்றை, தமிழக குழுவினர் பார்வையிட்டனர்.

அதன் அடிப்படையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அக்குழுவினர் ஆய்வு செய்து, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

இதுகுறித்து, அக்குழுவினர் கூறியதாவது:

ஜப்பான் நாட்டில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான டோக்கியோவில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை, சென்னையிலும் செயல்படுத்தலாம்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை பொறுத்தவரையில், 2,400க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றில் அனைத்திற்கும் இணைப்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

சென்னை மாநகரில் கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலையாறு ஆகியவை, பிரதான நீர்நிலைகளாக உள்ளன. பருவமழை காலங்களில், ஒரு நீர்நிலையில் தண்ணீர் சென்றால், மற்ற நீர்நிலையில் தண்ணீர் குறைவாக செல்வதும் உண்டு.

எனவே, தண்ணீரின் அளவை மற்ற நீர்நிலைகளுக்கு திருப்பி விட, கூவம் அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலையாறு ஆகியவற்றிற்கு, போக்கு மற்றும் வரத்து என்ற அடிப்படையில், இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

இதன் வாயிலாக, கடலுக்கு அதிக அளவுதண்ணீர் சென்று வீணாவது குறைக்கப்பட்டு, மாற்று பாதையின் வாயிலாக, மற்ற நீர்நிலைகளில் தேக்க முடியும். மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளில், நீர்நிலைகளில் அணை கட்டி, நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் இருந்து கொசஸ்தலையாறு, பகிங்ஹாம் வாயிலாக வரும் நீர், கடலில் தான் கலக்கிறது. புழல் ஏரி குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.

எனவே, புழல் ஏரியில் நிரம்பி வெளியேறும் தண்ணீரை, அதன் அருகிலேயே நிலத்தடி சுரங்கங்கள் அமைத்து, நீர் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், ஒவ்வொரு நீர்ப்பிடிப்பு பகுதியிலும், நிலத்தடி சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, ஏரிகளில் நீர் வற்றும் போது, நிலத்தடி சுரங்கங்களில் இருந்து, 'பம்ப்' வாயிலாக அந்நீர், மீண்டும் ஏரியில் விடப்படும்.

இதுபோன்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளோடு, நீர் ஆதாரங்களையும் மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ஆக., மாதத்திற்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு, ஜப்பானின் ஜைகா நிறுவனம் நிதியுதவி வழங்க உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us