/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் மறியல் போராட்டம்
/
கடப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் மறியல் போராட்டம்
கடப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் மறியல் போராட்டம்
கடப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு கிராமவாசிகள் மறியல் போராட்டம்
ADDED : ஆக 16, 2024 10:31 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் மேல்காலனி கிராமத்தில், 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை.
வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக இருப்பதால், அதை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிதண்ணீருக்காக, கடப்பாக்கம் மேல்காலனி கிராமத்தில் சுத்திகரிப்பட்ட குடிநீர் மையம் அமைத்து தரவேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று கிராமவாசிகள் மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
கிராமவாசிகளின் கோரிக்கை மீது, இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று, சாலை மறியல போராட்டத்தை கைவிட்டு, கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.
இதனால் மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.