/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மனேரியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்
/
அம்மனேரியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்
அம்மனேரியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்
அம்மனேரியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்
ADDED : ஜூலை 12, 2024 02:18 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரியில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைச்சரிவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு, மேல்நிலை குடிநீர் தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று, கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது.
மற்றொரு மேல்நிலை குடிநீர் தொட்டி வாயிலாக தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கைவிடப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அந்த பகுதியில் வசிப்பவர்கள், விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பயனில்லாத அந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.