/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீடியன் செடிகளுக்கு மீண்டும் தண்ணீர்
/
மீடியன் செடிகளுக்கு மீண்டும் தண்ணீர்
ADDED : ஜூன் 18, 2024 06:17 AM

திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், திருமழிசையிலிருந்து மணவாளநகர் வரை சாலையின் நடுவே உள்ள மீடியன் பகுதியில் அலங்கார செடிகளான செவ் அரளி, மஞ்சள் அரளி போன்ற செடிகள் வளர்க்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், அலங்கார செடிகளுக்கு இடையில் வளரும் களைகளை வெட்டி, வாகனங்கள் மூலம் தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும்.
திருமழிசை- - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை மீடியன் பகுதியில் வைக்கப்பட்ட செடிகள் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், தற்போது இந்த செடிகள் வாடி கருகி வருவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மீடியன் பகுதியில் உள்ள செடிகளை தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.