/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வியாசபுரத்தில் வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
/
வியாசபுரத்தில் வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
வியாசபுரத்தில் வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
வியாசபுரத்தில் வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
ADDED : மே 10, 2024 12:59 AM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக சின்னம்மாபேட்டை சாலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது மூன்று இடங்களில் பிரஷர் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பம்ப் பழுதடைந்து உள்ளதால் நீர் வெளியேறி வருகிறது. இதனால் தினமும் 500 லிட்டர் வரை குடிநீர் வீணாகி வருகிறது.
குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக மக்கள் புலம்புகின்றனர்.கோடைக்காலத்தில் மக்கள் குடிநீருக்கு சிரமப்படும் நிலையில், நீர் வீணாக வெளியேறி வருவதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் சேதமடைந்த பிரஷர் பம்ப்களை விரைந்து சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.