ADDED : மார் 11, 2025 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது பஞ்சாட்சரமலை. இந்த மலை உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். பக்தர்களே இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
பிரதோஷம், சோமவார பூஜை உள்ளிட்டவை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
அதேபோல், பொதட்டூர்பேட்டை அடுத்த ஸ்ரீகாவேரிராஜபேட்டை ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார், வங்கனுார் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.