ADDED : ஏப் 12, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புங்கத்துார் பகுதியில், அலையன்ஸ் இந்தியா லிமிடெட் என்ற வீடு கட்டும் பணி மேற்கொள்ளும் கம்பெனி அமைந்துள்ளது.
கடந்த 8ம் தேதி கம்பெனியில் பெயின்டராக வேலை செய்து வரும் சதீஷ், 28, என்பவர் மது அருந்த வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த முருகன், அன்பழகன் ஆகிய இருவரும் தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சதீஷ், ஆபாசமாக பேசி இருவரையும் தாக்கி அலுவலக கண்ணாடிகளை உடைத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

