/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கத்தில் ஊராட்சியில் வார சந்தை குத்தகை ஏலம்
/
பேரம்பாக்கத்தில் ஊராட்சியில் வார சந்தை குத்தகை ஏலம்
பேரம்பாக்கத்தில் ஊராட்சியில் வார சந்தை குத்தகை ஏலம்
பேரம்பாக்கத்தில் ஊராட்சியில் வார சந்தை குத்தகை ஏலம்
ADDED : செப் 14, 2024 08:22 PM
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் காய்கறி வார சந்தை மற்றும் வாகன நிறுத்தம் வசூல் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி ஆகியோர் தலைமையில் நடந்தது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் சந்தைக்கான ஏலத்தில் 20 பேர் பங்கேற்றனர்.
இதில் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 35 என்பவருக்கு காய்கறி வார சந்தை ஏலம் ஆண்டுக்கு 3.35 லட்சத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 35 என்பவருக்கு வாகன நிறுத்தும் வசூல் ஆண்டுக்கு 47 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைத்தது.
வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 2025 செப்டம்பர் 30ம் தேதி வரை ஓராண்டுக்கு நடைமுறைக்கு வரும் என ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் தெரிவித்தார்.