/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ௐபைக் மீது லாரி மோதி வெல்டர் பரிதாப பலி
/
ௐபைக் மீது லாரி மோதி வெல்டர் பரிதாப பலி
ADDED : மே 05, 2024 10:56 PM

திருவள்ளூர்: கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் தசரதன், 37, இவர் தன் நண்பர் சிலம்பரசன், 36 என்பவருடன் டி.வி.எஸ்., அப்பாச்சி இரு சக்கர வாகனத்தில் வெல்டிங் பணிக்காக நேற்று முன்தினம் காலை திருத்தணி சென்று மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் கொசவன்பாளையம் அருகே மாலை 5:00 மணியளவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே தசரதன் பலியானார். சிலம்பரசன் படுகாயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுனர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மோனிக் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.