ADDED : ஜூலை 26, 2024 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர், அமைச்சர் காந்தி, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வருவாய் துறை சார்பில் பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை என, பல்வேறு துறை சார்பில் பகுதிவாசிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மொத்தம், 306 பயனாளிகளுக்கு, 1.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, அமைச்சர் காந்தி பேசுகையில், “ஏதோ பெயரளவிற்கு இந்த முகாமை நடத்தாமல், தமிழக அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டு வருகிறது,” என்றார்.