/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பற்ற அகரமேல் குளம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
/
பராமரிப்பற்ற அகரமேல் குளம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
பராமரிப்பற்ற அகரமேல் குளம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
பராமரிப்பற்ற அகரமேல் குளம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
ADDED : மே 01, 2024 01:23 AM

பூந்தமல்லி,:அகரமேல் ஊராட்சியில் உள்ள குளத்தை சீரமைக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சியில், பழமையான பச்ச வர்ண பெருமாள் கோவில் உள்ளது.இதன் அருகில், கோவில் குளம் உள்ளது.
இந்த குளக்கரையைச் சுற்றி கங்கை அம்மன் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளன.
இக்குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளம் பராமரிப்பின்றி உள்ளது.
குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலக்கிறது. குப்பையும் குளத்தில் கொட்டப்படுவதால், நீர் மாசடைந்து பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த குளத்தை துார் வாரி, சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.