/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது
/
ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது
ADDED : ஜூலை 09, 2024 06:32 AM

ஆவடி: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ், 38; இந்திய ராணுவ வீரர்.
இவர், கடந்த மே 10ம் தேதி இரவு, அதீத மது போதையில், படுக்கை அறையில் படுத்திருந்தார்.அவரது மனைவி லீமா ரோஸ் மேரி, 36, அவரை மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்தது தெரிந்தது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையில், வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில், அவரது மனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம்:
என் கணவர், தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து, என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், சம்பவ தினத்தன்று மது போதையில் படுத்திருந்த அவரை, புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், லீமா ரோஸ் மேரியை கைது செய்து சிறையில்அடைத்தனர்.