/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்று பாலத்தை ஒட்டி மின் விளக்கு அமைக்கப்படுமா?
/
ஆரணி ஆற்று பாலத்தை ஒட்டி மின் விளக்கு அமைக்கப்படுமா?
ஆரணி ஆற்று பாலத்தை ஒட்டி மின் விளக்கு அமைக்கப்படுமா?
ஆரணி ஆற்று பாலத்தை ஒட்டி மின் விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : மே 04, 2024 09:06 PM
ஊத்துக்கோட்டை:தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை செல்கின்றனர்.
இப்பகுதிகளில் இருந்து மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், முக்கிய அரசு தலைமை நிறுவனங்களுக்கு செல்ல திருவள்ளூர் செல்ல வேண்டும்.
இவ்வாறு செல்பவர்கள் திருவள்ளூர் சாலையில், ஆரணி ஆற்றின் மேல் 29 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்ல வேண்டும். இதே போல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
இதில், பாலத்தின் கீழே செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம், தனியார் மெட்ரிக்., பள்ளி ஆகியவை உள்ளன. போக்குவரத்து அதிகமுள்ள இந்த பாலத்தின் சாலை சந்திப்பில், இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து உள்ளது. சாலையில் செல்லும் வாகனங்களின் வெளிச்சத்தில் தான் செல்ல வேண்டி உள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.