/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகனமேடை அமையுமா?
/
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகனமேடை அமையுமா?
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகனமேடை அமையுமா?
ஈமச்சடங்கு செலவுகள் அதிகரிப்பு எரிவாயு தகனமேடை அமையுமா?
ADDED : மார் 02, 2025 11:47 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் பொதுவாக, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் பாப்பான்குளம் சுடுகாடு உள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள சுடுகாட்டில், எரிவாயு தகனமேடை அமைக்க, 2022ம் ஆண்டு, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நீர்நிலை பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள முடியாத காரணத்தால், இத்திட்டம் கைவிடப்பட்டது. வருமானம் குறைவாக உள்ள குடும்பத்தினர், ஈமச்சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாமல், தவித்து வருகின்றனர்.
விறகுகள், வரட்டி சாணம், பெட்ரோல், கூலி என, பல ஆயிரங்கள் செலவிடுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த முறையில் எரிப்பதால், நகரின் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி மா.பொ.சி., நகரைச் சேர்ந்த சபீன் என்பவர் கூறியதாவது:
எங்கள் பகுதியைச் சேர்ந்த ருக்மணி, 70, என்ற பெண்ணின் இறுதிச்சடங்கின் போது, சுடுகாட்டு செலவு மட்டுமே, 30,000 ரூபாய் கேட்கப்பட்டது. அந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்தனர்.
பகுதிவாசிகள் ஒன்று சேர்ந்து சேகரித்த தொகையை கொண்டு, இறுதிச்சடங்கை மேற்கொண்டோம். எளிய மக்களால் இறுதிச்சடங்கு மேற்கொள்ள முடியாத நிலை, கும்மிடிப்பூண்டியில் தொடர்கிறது.
எனவே, உடனடியாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உட்பட்ட பகுதியில், எரிவாயு தகனமேடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.