/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
/
மீஞ்சூர் புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : மே 16, 2024 12:52 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் பஜார் பகுதியில், மளிகை, காய்கறி, நகை என, 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள, கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக இது உள்ளது.
பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் இந்த பஜார் பகுதி அமைந்து உள்ளதால், எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலும் இருக்கிறது.
நாள் முழுதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஒலிபெருக்கி வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையத்தில் போலீசார் யாரும் பணிபுரிவதில்லை.
'நான் உங்களுக்கு உதவலாமா?' என புறக்காவல் நிலையத்தில் எழுதி வைக்கப்பட்டு, அங்கு போலீசார் யாரும் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், 2 கி.மீ., தொலைவில் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போதையை நிலையில் புறக்காவல் நிலையத்தை சுற்றிலும் காய்கறி, பழக்கடைகள் தான் போடப்பட்டு உள்ளன.
பயனின்றி கிடக்கும் புறக்காவல் நிலையத்தில், 24 மணிநேரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், அவர்களை உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், சாலையில் தேவையின்றி நிறுத்தப்படும் வாகனங்களை அங்கிருந்து வெளியேற்றவும் அறிவுறுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.