/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருநாதராஜபுரத்தில் நுாலகம் செயல்பாட்டிற்கு வருமா?
/
திருநாதராஜபுரத்தில் நுாலகம் செயல்பாட்டிற்கு வருமா?
திருநாதராஜபுரத்தில் நுாலகம் செயல்பாட்டிற்கு வருமா?
திருநாதராஜபுரத்தில் நுாலகம் செயல்பாட்டிற்கு வருமா?
ADDED : செப் 15, 2024 11:23 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருநாதராஜபுரம் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. நகர நெரிசலில் இருந்து விலகி, மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்த குக்கிராமம். கிராமத்தின் தென்மேற்கில், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பகுதிவாசிகள் நாட்டு நடப்பு குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட நுாலக கட்டடம் தற்போது செயல்படுவது இல்லை.
இதனால், திருநாதராஜபுரம் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி நுாலக கட்டடத்தில் மீண்டும் நுாலகத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.