/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1,700 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் சீரமைக்கப்படுமா?
/
1,700 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் சீரமைக்கப்படுமா?
1,700 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் சீரமைக்கப்படுமா?
1,700 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் சீரமைக்கப்படுமா?
ADDED : மே 23, 2024 11:44 PM

பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமம் நடுத்தெருவில் அமைந்துள்ளது, ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவில், 1,700 ஆண்டுகள் பழமையானது.
இந்த கோவிலை பற்றிய குறிப்பு செப்பேடுகள் மற்றும் கல்வெட்டில் 'ராமசந்திரநல்லூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் இக்கோவில், தற்போது ஆலமர வேர் புகுந்துள்ளதால், கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆலமர வேரால் கட்டடம் உறுதி தன்மையை இழந்தும் வருகிறது. பழமையும், பெருமையும் கொண்ட ஆதிகேசவ பெருமாள் கோவில் பராமரிப்பு இன்றி பாழடைந்து வருவதால், உள்ளூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, பழமை வாய்ந்த இக்கோவிலை சீரமைக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.