/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரிந்து விழும் ஆரணி ஆற்றின் கரை பொ.ப.துறை நடவடிக்கை எடுக்குமா?
/
சரிந்து விழும் ஆரணி ஆற்றின் கரை பொ.ப.துறை நடவடிக்கை எடுக்குமா?
சரிந்து விழும் ஆரணி ஆற்றின் கரை பொ.ப.துறை நடவடிக்கை எடுக்குமா?
சரிந்து விழும் ஆரணி ஆற்றின் கரை பொ.ப.துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மே 30, 2024 12:35 AM

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், நகரி அருகே மலைக்குன்றுகளில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியே, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.
அதன்பின், சிட்ரப்பாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், கல்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியே பாய்ந்து, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து பழவேற்காடு அருகே, 'புலிக்காட்' எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.
இதில் ,ஊத்துக்கோட்டை சிட்ரப்பாக்கம் அணைக்கட்டு, 1989ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இதில், 100 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
இந்த அணைக்கட்டை ஒட்டி, சிட்ரப்பாக்கம் பகுதியில் கரையில் இருந்த கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால், இதை ஒட்டி நிலங்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மழைக்காலம் வரும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.