/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவ காப்பீடு அட்டை பெற பொன்னேரியில் மையம் அமையுமா?
/
மருத்துவ காப்பீடு அட்டை பெற பொன்னேரியில் மையம் அமையுமா?
மருத்துவ காப்பீடு அட்டை பெற பொன்னேரியில் மையம் அமையுமா?
மருத்துவ காப்பீடு அட்டை பெற பொன்னேரியில் மையம் அமையுமா?
ADDED : செப் 09, 2024 06:58 AM
பொன்னேரி: பொன்னேரி சப்- கலெக்டர் அலுவலகம் பின்புறம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்து, அதற்கான அட்டை பெறுவதற்கான மையம் செயல்பட்டு வந்தது.
இங்கு பயனாளிகள் வந்து எளிதாக திட்டத்தில் இணைந்து பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச்சில் காப்பீடு திட்ட மையம் திடீரென மூடப்பட்டது.
ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் மையம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐந்து மாதங்கள் ஆன நிலையில், பொன்னேரியில் மீண்டும் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான மையம் செயல்படவில்லை.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே செயல்படுகிறது. பொன்னேரி தாலுக்காவிற்கு உட்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கு, 72 கி.மீ., தொலைவில் உள்ள திருவள்ளூருக்கு செல்லும் நிலை உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக, 1,000க்கும் அதிகமான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்து கொள்ள முடியும்.
இத்திட்டத்தின்படி, காப்பீடு பெற்ற ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
பொன்னேரியில் மையம் இல்லாததால், அவசர சிகிச்சை பெறுவதற்கு உடனடியாக காப்பீடு திட்டத்தில் இணைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
பொன்னேரியில் மீண்டும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் மையம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.