/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மடுகூர் பாலத்திற்கு இணைப்பு சாலை அமையுமா?
/
மடுகூர் பாலத்திற்கு இணைப்பு சாலை அமையுமா?
ADDED : ஜூலை 28, 2024 02:45 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து வெள்ளாத்துார் வழியாக மடுகூர் செல்லும் வழியில் ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த பாலம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் சேதம் அடைந்தது.
அதை தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இணைப்பு சாலை பணி நிறைவடையாமல் உள்ளது.
இந்த வழியாக மடுகூர், அம்மனேரி, கொண்டாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், ஆர்.கே.பேட்டை அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்க வந்து செல்கின்றனர்.
சைக்களில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், பாலத்திற்கு இணைப்பு சாலை இல்லாததால், அவதிப்பட்டு வருகின்றனர்.
வரும் மழைக்காலத்திற்கு முன்பாக இணைப்பு சாலை வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெள்ளம் பாய துவங்கினால், இணைப்பு சாலையாக தற்காலிமாகமண் கொட்டி சீரமைக்கப்பட்டுள்ள பகுதி பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.