/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போந்தவாக்கம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமையுமா?
/
போந்தவாக்கம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமையுமா?
போந்தவாக்கம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமையுமா?
போந்தவாக்கம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமையுமா?
ADDED : ஏப் 26, 2024 08:12 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது அரசு மேனிலைப் பள்ளி. இங்கு அனந்தேரி, கச்சூர், பெரிஞ்சேரி, சீத்தஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளது. சில இடங்களில் முழுதும் உடைந்து காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் அசம்பாவித செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கழிப்பறை இல்லாததால், உடைந்த சுற்றுச்சுவரை கடந்து சென்று மாணவர்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.
மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இரண்டு கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இது போதுமானதாக இல்லை. மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் அரசு மேனிலைப் பள்ளிக்கு தற்போது கோடை விடுமுறை காலத்தை பயன்படுத்தி புதிதாக கழிப்பறைகள் கட்டி கொடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

