/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டீ கடையில் குட்கா விற்ற பெண் கைது
/
டீ கடையில் குட்கா விற்ற பெண் கைது
ADDED : ஆக 14, 2024 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில் உள்ள கடைகளில், குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவரைப்பேட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அங்குள்ள டீக்கடை ஒன்றில், விற்பனைக்கு வைத்திருந்த, 58 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளரான, பொன்னேரியைச் சேர்ந்த கோமதி, 39, என்ற பெண்ணை கைது செய்தனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.