/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஷ பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு
/
விஷ பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு
ADDED : ஜூன் 24, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே பரணம்பேடு கிராமத்தில் வசித்தவர் மகேஷ் மனைவி லதா, 35. இளநீர் கடை நடத்தி வந்தார்.
இம்மாதம், 20ம் தேதி இரவு, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த அவரை விஷ பூச்சி ஒன்று கடித்தது.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.