ADDED : ஆக 22, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி நாகம்மாள்,38. இவர் கடந்த, 15ம் தேதி இரவு குடிசை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக நாகம்மாள் வீட்டின் பின்புறம் சென்ற போது பாம்பு கடித்ததில் வீட்டிற்கு வந்து மயங்கி விழுந்தார்.
அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நாகம்மாளை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நாகம்மாள் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.