/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
/
சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 08, 2024 06:14 AM
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வனிதா, 48. இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து நல்லாட்டூர் பகுதியில் விற்பனை செய்து வந்தார்.
இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், கனகம்மாசத்திரம் போலீசார் நல்லாட்டூர் பகுதியில் சோதனை செய்ததில் வனிதாவை நான்கு மாதங்களுக்கு முன் கைது செய்தனர்.
வனிதாவை கனகம்மாசத்திரம் போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி.,வுக்கு பரிந்துரை செய்தனர். எஸ்.பி., வனிதாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். நேற்று கலெக்டர் பிரபுசங்கர், வனிதாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து கனகம்மாசத்திரம் போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் ஆணையை புழல் சிறையில் உள்ள வனிதாவிடம் வழங்கினர். இதன்படி அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.