ADDED : ஜூன் 04, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, : தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், மீஞ்சூர் ஒன்றியம் சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னேரி அடுத்த மெதுாரில், சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 120 பேர் பங்கேற்றனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில், வரும் 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.