ADDED : ஜூன் 19, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஜோதி நகரைச் சேர்ந்தவர் பாபு, 35. கூலித் தொழிலாளி.
இவர் திருத்தணி காந்திசிலை அருகே உள்ள பழம் மற்றும் தேங்காய் கடையில் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று காலை என்.எஸ்.சி. போஸ் ரோடு அருகே இரண்டாவது தானியங்கி ரயில்வே கேட் வழியாக நடந்து சென்ற போது அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் பாபு மீது மோதியது.
அரக்கோணம் ரயில்வே போலீசார் பாபுவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.