/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீ நிகேதன் பள்ளியில் யோகா தினம்
/
ஸ்ரீ நிகேதன் பள்ளியில் யோகா தினம்
ADDED : ஜூன் 22, 2024 12:17 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று சர்வதேச யோகா தினம் ஒட்டி மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் யோகா பயிற்சியாளர் ராஜசேகரன் பங்கேற்று, யோகா கலையின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் விஷ்ணு சரண் தலைமை வகித்தார் முதன்மை செயல் அலுவலர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் வரவேற்றார்.
யோகா பயிற்சி ஆசிரியர் ஜோதி தயாளன் மாணவர்களுக்கு யோகப் பயிற்சி அளித்தார். பள்ளி துணை முதல்வர் கவிதாகந்தசாமி, உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி ஒன்றியம் தாடூர் கடலீஸ்வரர் கோவில் வளாகத்தில், உலக யோகா தினம் ஒட்டி, கடலீஸ்வரர் ஆன்மிக அறக்கட்டளை மற்றும் வாழும் கலை ஆகியவை இணைந்து யோகா பயிற்சி நடத்தின.
இதில், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிரண் ஆகியோர் பங்கேற்று பயிற்சியை துவக்கி வைத்தனர்.