/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 05, 2024 11:01 PM
திருத்தணி: சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது.
இக்கல்லுாரியில், 2024-- 2025ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் கூறியதாவது:
திருத்தணி அரசு கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேருவதற்கு நாளை (இன்று) முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து ஆலோசனை பெறலாம்.
மேலும் கல்லுாரியிலேயே சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே மாணவர்கள் விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள நாட்களில் கல்லுாரிக்கு நேரில் வந்தும் விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.