/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியுடன் பயணியரை அச்சுறுத்திய இளைஞர் கைது
/
கத்தியுடன் பயணியரை அச்சுறுத்திய இளைஞர் கைது
ADDED : மே 07, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் பேருந்து நிறுத்தத்தில், இளைஞர் ஒருவர் கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன், பயணியரை அச்சுறுத்தி வருவதாகவும், பொது சொத்துகளை சேதப்படுத்துவதாகவும், நேற்று பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் ஒருவர் இரும்பு ராடுகள் மற்றும் கத்தியுடன் பயணியருக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தார்.
இதை தொடர்ந்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நொச்சிலி காலனியைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜதுரை, 22, என தெரியவந்தது.