/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவி பாலியல் பலாத்காரம் 'போக்சோ' வில் வாலிபர் கைது
/
மாணவி பாலியல் பலாத்காரம் 'போக்சோ' வில் வாலிபர் கைது
மாணவி பாலியல் பலாத்காரம் 'போக்சோ' வில் வாலிபர் கைது
மாணவி பாலியல் பலாத்காரம் 'போக்சோ' வில் வாலிபர் கைது
ADDED : ஜூன் 09, 2024 11:09 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி. கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு 'நீட்' பயிற்சிக்காக திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு நடத்தும் பயிற்சியில் படித்து வந்தார்.
சிறுமியின் சகோதரி திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ் எதிரில் கணவர் சஷ்டிகுமார், 24 உடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி கனகம்மா சத்திரத்தில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்தில் வந்து இறங்கிய சிறுமியை சஷ்டிகுமார் வகுப்பில் விட்டு விட்டு செல்கிறேன் எனக்கூறி பைக்கில் ஏற்றி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சஷ்டிகுமாரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.