ADDED : செப் 14, 2024 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசன்அலி, 34. பெரியபாளையம் அருகே, ஆரணி ஆற்றில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது, இரும்பு பிளேட்டை துாக்கும்போது, அசன்அலி தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியபாளையம் போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.