/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழப்பு
/
ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 19, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:சென்னை பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரை சேர்ந்தவர் சரவணன், 29. இவர் நேற்று காலை திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலையம் அருகே வசிக்கும் தன் நண்பரை சந்திக்க புறநகர் ரயிலில் வந்துள்ளார்.
ரயிலில் இருந்து இறங்கியவர் மணவூர் ரயில் பாதையைக் கடந்தபோது அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.