/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் போட்டியில் வாலிபர் படுகொலை
/
தொழில் போட்டியில் வாலிபர் படுகொலை
ADDED : ஜூலை 06, 2024 01:49 AM

திருவள்ளூர்:திருமழிசை, பிரியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 30. இவர், இறந்தவர்களுக்கான இறுதி ஊர்வல வண்டியில் மலர் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 5:00 மணியளவில், திருமழிசை மயானத்தில் இறந்த ஒருவருக்காக மலர் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர், 23, உள்ளிட்ட மூவர், முகமூடி அணிந்து வந்து கத்தியால் நாகராஜை சரமாரியாக குத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே, நாகராஜ் துடிக்க துடிக்க உயிரிழந்தார்.
தடுக்க சென்ற வெட்டியான் வேலை செய்யும் முத்துக்கிருஷ்ணன் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் விசாரித்தனர். இதில், தொழில்போட்டி காரணமாக, கிஷோர் கும்பலால் நாகராஜ் கொல்லப்பட்டது தெரிய வந்தது. கிஷோரை கைது செய்த போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.
நாகராஜூம், கிஷோரும் இணைந்து தொழில் செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக நாகராஜ் தனியாக தொழில் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.