/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடன்
/
தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடன்
ADDED : பிப் 22, 2024 11:10 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு, மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் இன்று நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட தொழில் மையம் வாயிலாக, மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் இன்று, 23ல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இதில், புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதமர் உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்தும் குறுந்தொழில் முறைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில், 1 கோடி ரூபாய் வரை கடனுதவி, மானியத்துடன் கிடைக்கும்.
எனவே, மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெறவிரும்பும் தொழில் முனைவோர் முகாமில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.