/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னவயலில் மின்கம்பம் நட 10 பனைமரங்கள் அகற்றம்
/
சின்னவயலில் மின்கம்பம் நட 10 பனைமரங்கள் அகற்றம்
ADDED : நவ 10, 2025 11:00 PM

திருவள்ளூர்: சிவன்வயல் கிராமத்தில் மின்கம்பம் அமைக்க, 10 பனை மரங்களை மின்வாரியத்தினர் அகற்றியதாக, விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
திருவள்ளூர் ஒன்றியம் சிவன்வயல் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்ற விவசாயி, கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:
திருவள்ளூர் ஒன்றியம் சிவன்வயல் கிராமம், கசவமேடு கிராமத்தில், எனக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல வழியில்லாததால், நீர்வரத்து கால்வாயோரமாக சென்று வருகிறேன்.
கடந்த 10 நாட்களுக்கு முன், கீழானுார் மின்வாரியத்தினர், என் வயல் அமைந்துள்ள பகுதியில், மின்கம்பம் நட்டனர். அப்போது, அவ்வழியாக இருந்த 10 பனைமரங்களை அகற்றி, கால்வாயில் போட்டனர்.
அனுமதியின்றி பனைமரங்களை வெட்டி கால்வாயில் போடப்பட்டுள்ளதால், வயலுக்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறேன். எனவே, பனைமரம் வெட்டிய மின்வாரியத்தினர் மீது நடவடிக்கை எடுத்து, கால்வாயில் போடப்பட்டுள்ள பனைமரத்தை அப்புறப்படுத்தி, வழி ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

