ADDED : அக் 21, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில், 10 டன் பட்டாசு குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 107 பட்டாசு கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. திருவள்ளூர் நகரில் மட்டும், 17க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மழை விட்டு, விட்டு பெய்ததால், பட்டாசு வெடிப்பதில் எவ்வித இடையூறும் இன்றி, பொதுமக்கள் வெடித்தனர்.
இவ்வாறு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பை, தெருக்களில் மலைபோல் குவிந்தன. நேற்று, நகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றினர்.
அதில், 10 டன் வரை பட்டாசு குப்பை இருந்ததாக, நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.