/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீண்டும் சிற்றுந்து இயக்க 10 கிராம மக்கள் காத்திருப்பு
/
மீண்டும் சிற்றுந்து இயக்க 10 கிராம மக்கள் காத்திருப்பு
மீண்டும் சிற்றுந்து இயக்க 10 கிராம மக்கள் காத்திருப்பு
மீண்டும் சிற்றுந்து இயக்க 10 கிராம மக்கள் காத்திருப்பு
ADDED : ஆக 31, 2025 07:49 PM
பொன்னேரி:பொன்னேரி - தேவதானம் வழித்தடத்தில் மீண்டும் சிற்றுந்து இயக்க வேண்டும் என, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் இருந்து, கே.என்.கண்டிகை, பி.என்.கண்டிகை, வெள்ளக்குளம், சிறுளப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, தேவதானம் செல்லும் வழித்தடம் உள்ளது.
இந்த வழித்தடதத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்தின் சிற்றுந்து இயக்கப்பட்டு வந்தது. சாலை குறுகலாகவும், சேதமடைந்து இருந்ததாலும் சிற்றுந்து பழுதானதை தொடர்ந்து, நாளடைவில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த வழித்தடத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்கின்றனர்.
இவர்கள் போக்குவரத்து வசதியில்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தேவதானம் பகுதியில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதங்களிலும், தமிழ் புத்தாண்டு, ஏகாதசி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பொன்னேரியில் இருந்து பேருந்து இல்லாததால், பொன்னேரி - மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - அனுப்பம்பட்டு, அனுப்பம்பட்டு - தேவதானம் என, மூன்று வழித்தடங்களில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில், 15 கி.மீ., சுற்றிக் கொண்டு பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், பொன்னேரி - தேவதானம் இடையே சிற்றுந்து இயக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.