/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரைப்பாக்கத்தில் 100 கிலோ குட்கா பறிமுதல்
/
தாமரைப்பாக்கத்தில் 100 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : நவ 27, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில், வெங்கல் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 100கிலோ எடையுள்ள, குட்கா பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம்.
இது தொடர்பாக பைக்கில் வந்த தாமரைப்பாக்கம் நாகராஜ், 35, கணேஷ், 36 மற்றும் அம்மம்பாக்கம் ரவி, 61, ஆகிய மூன்று பேரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.