/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சட்டக்கல்லுாரி மாணவரிடம் ரூ.10,000 ‛'அபேஸ்'
/
சட்டக்கல்லுாரி மாணவரிடம் ரூ.10,000 ‛'அபேஸ்'
ADDED : ஜன 22, 2024 01:50 AM
திருத்தணி:சென்னை தாம்பரம் பகுதி சேர்ந்தவர் மதியழகன், 23. இவர் ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்காக 10,000 ரூபாய் தன் 'லேப்டேப்'பையில் வைத்துக் கொண்டு, முதுகில் மாட்டியவாறு இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
சென்னை-- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அருகே, சாலையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர், மதியழகனிடம் 'லிப்ட்' கேட்டு வாகனத்தில் ஏறினார்.
திருத்தணி பைபாஸ் வந்ததும், வாலிபர், நான் இறங்கிக் கொள்கிறேன்' என கூறி வாகனத்தில் இறங்கி சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மதியழகன் தனது பை திறந்து இருந்ததும், அதிலிருந்த, ரூபாய் மாயமானதும் தெரிந்தது.
மதியழகன் கொடுத்த புகாரில் பேரில் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.