104 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலி: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்
104 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலி: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்
UPDATED : ஜூலை 05, 2026 08:16 PM
ADDED : ஜூலை 05, 2026 07:41 PM
கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில், 104 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், கடம்பத்துார், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, சோழவரம், திருத்தணி, திருவாலங்காடு, வில்லிவாக்கம், புழல் ஆகிய 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இதில், 104 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஊராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதில், ஒரு ஊராட்சி செயலரே, இரண்டு, மூன்று ஊராட்சிகளில், கூடுதல் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கிராமப்பகுதிகளில் அடிப்படை தேவைகளுக்கே மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஊராட்சி செயலர் பங்கேற்காமலேயே கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
