/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குமாரசுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
/
குமாரசுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED : பிப் 08, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல்லரம்பாக்கம்:புல்லரம்பாக்கம் குமாரசுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் வள்ளி, தேவசேனாம்பாள் சமேத குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தை கிருத்திகையை முன்னிட்டு, பாலாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக, கிராம மக்கள் 108 பால்குடத்தினை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின், வள்ளி, தேவசேனாம்பாள் மற்றும் குமாரசுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. இதில், புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.