/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி... 87 சதவீதம் !கடந்த ஆண்டை விட 2.28 சதவீதம் குறைவு
/
திருவள்ளூரில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி... 87 சதவீதம் !கடந்த ஆண்டை விட 2.28 சதவீதம் குறைவு
திருவள்ளூரில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி... 87 சதவீதம் !கடந்த ஆண்டை விட 2.28 சதவீதம் குறைவு
திருவள்ளூரில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி... 87 சதவீதம் !கடந்த ஆண்டை விட 2.28 சதவீதம் குறைவு
ADDED : மே 11, 2024 01:35 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், தேர்வு எழுதிய 32,511 பேரில், 28,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 86.52 சதவீதம். இது கடந்த ஆண்டு பெற்ற, 88.80 சதவீதத்தை விட, 2.28 சதவீதம் குறைவாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில், 259 பள்ளிகளில், 16,320 மாணவர்கள், 16,191 மாணவியர் என மொத்தம், 32,511 பேர் உள்ளனர்.
கடந்த ஏப்., மாதத்தில் நடந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 137 மையங்களில், 16,320 மாணவர், 19,191 மாணவியர் என, மொத்தம் 32,511 பேர் தேர்வு எழுதினர்.
நேற்று பொதுத்தேர்வு முடிவை மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்டார். இதில், 13,467 மாணவர், 14,662 மாணவியர் என, மொத்தம் 28,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம், 86.52 சதவீதமாகும். இது, கடந்த ஆண்டு பெற்ற, 88.80 சதவீதத்தை விட, 2.28 சதவீதம் குறைவாகும்.
வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியரே, அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம், 20 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது, கல்வி துறை அலுவலர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கடந்த, 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில், கொரோனா தொற்று காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அந்த ஆண்டு, மாணவ - மாணவியர் கால், அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. கடந்த, 2019க்கு முன், 90-92 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், கொரோனா தொற்றுக்குப் பின் தேர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
100 சதவீதம்
தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்
பொன்னேரி கல்வி மாவட்டம்:
ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, மிட்னமல்லி. பார்வையற்றோர் பள்ளி, பூந்தமல்லி மற்றும் எருமவெட்டிப்பாளையம். நாளூர், கூனங்குப்பம், அண்ணாமலைச்சேரி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகள். மற்றும், அரசு உயர்நிலைப் பள்ளி, ஓபசமுத்திரம்.
திருவள்ளூர் கல்வி மாவட்டம்:
ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளி, புங்கத்துார். அரசு மேல்நிலைப் பள்ளி, செங்காட்டனுார். உயர்நிலைப் பள்ளி, கோணசமுத்திரம். பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை. அரசு உயர்நிலைப் பள்ளி, கொண்டாபுரம்.
அரசு உயர்நிலைப் பள்ளி, கரீம்பேடு. அரசு உயர்நிலைப் பள்ளி, ஆதிவராகபுரம். கூவம், விளாப்பாக்கம், சென்றாயன்பாளையம், பங்காரம்பேட்டை, மாமண்டூர் உயர்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி.