/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டிய வீட்டில் 11 சவரன் திருட்டு
/
பூட்டிய வீட்டில் 11 சவரன் திருட்டு
ADDED : பிப் 03, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: புழல் அடுத்த விநாயகபுரம், பரிமளா நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 31. தனியார் நிறுவன ஊழியர்.
இவரது மனைவி எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், சரவணணும் அங்கேயே தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மதியம், வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், வீட்டில் உள்ள பீரோவில் இருந்த, 11 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.
இது குறித்து, சரவணன் புழல் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.

