/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
/
ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
ADDED : டிச 15, 2024 12:28 AM

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், பீச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, வெளியேற்றப்படும் தண்ணீர், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கவரைப்பேட்டை அருகே ஆரணி ஆற்றை ஒட்டியுள்ள ஆர்.என்.கண்டிகை, மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, விளை நிலங்களில், ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால், 110 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார், வேளாண் உதவி அலுவலர் சுகுணா ஆகியோர், மேற்கண்ட மூன்று கிராமங்களில் மூழ்கிய நெற்பயிர்களை, நேற்று ஆய்வு செய்தனர். முழுமையான கணக்கெடுத்து, உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.