/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கில் பெட்ரோல் நிரப்பிய போது தீப்பற்றி 12 வயது சிறுவன் காயம்
/
பைக்கில் பெட்ரோல் நிரப்பிய போது தீப்பற்றி 12 வயது சிறுவன் காயம்
பைக்கில் பெட்ரோல் நிரப்பிய போது தீப்பற்றி 12 வயது சிறுவன் காயம்
பைக்கில் பெட்ரோல் நிரப்பிய போது தீப்பற்றி 12 வயது சிறுவன் காயம்
ADDED : மார் 15, 2025 06:50 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி, 45; தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, இவரது தென்னை மரத்தில் வளர்ந்த தேங்காயை பறிக்க, அரக்கோணம் அடுத்த ஜடேரி குப்பத்தில் வசிக்கும் வேலு, 12, என்ற சிறுவனை, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.
கணேசபுரம் கால்நடை மருத்துவமனை அருகே வந்த போது, பெட்ரோல் தீர்ந்து வாகனம் நின்றது. இதையடுத்து, திருவாலங்காடு சென்று பெட்ரோல் வாங்கி வந்த லட்சுமிபதி, இருசக்கர வாகனத்தில் ஊற்ற முயன்றார். மாலை நேரம் போதிய வெளிச்சம் இல்லாததால், சிறுவனிடம் தீக்குச்சியை பற்றவைத்து, பெட்ரோல் டேங்க் அருகே காண்பிக்குமாறு கொடுத்துள்ளார்.
அப்போது, பெட்ரோல் சிதறி தீக்குச்சியில் விழுந்து தீப்பற்றியது. இதில், சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவன், திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.