/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏனம்பாக்கத்தில் 13 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
/
ஏனம்பாக்கத்தில் 13 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஏனம்பாக்கத்தில் 13 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஏனம்பாக்கத்தில் 13 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ADDED : ஜன 24, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் குறுவட்டத்தில், ஏனம்பாக்கம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பூக்கள் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து லோகேஸ்வரி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி நேற்று, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாஸ் தலைமையில், வருவாய், பொதுப்பணி ஆகிய துறை அதிகாரிகள், ஜே.சி.பி., வாயிலாக 13.13 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டனர். இதன் மதிப்பு 65.65 லட்சம் ரூபாய். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.